பூலாமலை குட்டுப்பட்டி

அமைவிடம் - பூலாமலை குட்டுப்பட்டி
ஊர் - பூலாமலை குட்டுப்பட்டி
வட்டம் - நத்தம்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், கருப்பு சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு பானையோடுகள், இரும்பு உருக்கு கழிவுப்பொருட்கள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2013
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மதுரை கோ.சசிகலா

விளக்கம் -

கரந்த மலையின் கிழக்கு திசையில் பூலாமலை அமைந்துள்ளது. இம்மலையைச் சேர்ந்த கிராமமாகிய குட்டுப்பட்டி நத்தத்திலிருந்து வடமேற்கில் சுமார் 7 கி.மீ. தொலைவில் கரந்தமலைக்கு கிழக்காக அமைந்துள்ளது. இவ்வூரின் வடமேற்கே திண்டுகல்லுக்கு செல்லும் சாலையின் வலதுபுறம் பூலாமலையின் அடிவாரத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வாழ்விடத்துடன் கூடிய ஈமக்காடு காணப்படுகின்றது. இங்கு மூன்றுக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இவ்விடத்தில் undisturbed habitation mound காணப்படுகிறது. இங்கு கருப்பு சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு பானையோடுகளும், இரும்பு உருக்கு கழிவுப்பொருட்களும் பரவிக் கிடக்கின்றன. தார்ச்சாலையின் இருமருங்கிலும் பெருங்கற்கால வாழ்விடப்பகுதிகள் காணக்கிடக்கின்றன. இவ்வாழ்விடப்பகுதியின் மொத்தப் பரப்பளவு சுமார் 5 ஏக்கருக்கும் மேற்பட்டதாகும்.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாரத் தொல்லியல் கள ஆய்வின் போது பல்வேறு இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களின் வகைகளான கல்வட்டங்களும், குத்துக்கற்களும் காணப்படுகின்றன. பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த பானையோடுகள் வேளாண்மை நிலப்பகுதிகளிலும், ஊரின் புறத்தேயுள்ள ஏரிக்கரையில் முதுமக்கள் தாழிகளின் உடைந்த எச்சங்களும் கிடைக்கின்றன. லிங்கவாடி போன்ற ஊர்களில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் எழுத்தின்றி, உருவத்துடன் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. மேற்பரப்பாய்வில் பூலாமலையின் அடிவாரத்தில் காணப்படும் சிற்றூரான குட்டுப்பட்டியில் கண்டறியப்பட்ட பண்பாட்டு எச்சங்கள் தமிழகத் தொல்லியல் கழகத்தின் வெளியீடான ஆவணம் என்னும் ஆண்டு இதழில் வெளியிடப்பட்டு ஆவணப்பபடுத்தப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.